Friday, December 24, 2010

சிறந்த மொக்கைகள்

ஹோட்டெல்ல காசு கொடுக்கலைன்னா மாவாட்ட சொல்லுவாங்க. ஆனா, பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

பால் கோவாவை பாலில் செய்யலாம். ஆனா, ஆமை வடையை ஆமையில் செய்ய முடியுமா?

பால் போடுறவன் பால் காரன். பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். ஆனா, பிச்சை போடுறவன் பிச்சை காரனா?

அம்மா அடிச்சா வலிக்கும். அப்பா அடிச்சா வலிக்கும். ஆனா, சைட் அடிச்சா வலிக்குமா?

மிதி வண்டியை மிதிச்சிக்கிட்டு போகலாம். ஆனா , மாட்டு வண்டியை மாட்டிக்கிட்டு போகமுடியுமா?

இதுக்கெல்லாம் போயி அழுவலாமா?

No comments:

Post a Comment